வாட்ஸ் அப்பில் விரைவில் லைக் பட்டன் !

whatsapp-like-mark-as-unread-350x250

வாட்ஸ் அப் – ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போல் கணினி பதிப்பான வாட்ஸ் அப் வெப் – ம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

செல்பேசியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் எழுத்து, படம், காணொளி ஆகிய வடிவில் செய்திகளை அனுப்பலாம்.

இது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் செய்தி தொடர்பு செயலியாக ஸ்மார்ட் போன்களில் வலம் வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல், வாட்ஸ் அப் செயலியானது கணினியில் பயன்படுத்தக்கூடிய வசதியை வழங்கியது. ஆனால், செல்பேசியில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

தற்போது, வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் படி, ஸ்டேடஸ் மாற்றலாம், ஃப்ரபைல் படத்தை மாற்றியமைக்கலாம். அரட்டையை நீக்கலாம், ஆவணப்படுத்தலாம், குழுவை நிர்வகிக்கலாம். ஆனால் இந்த மேம்படுத்தல்கள் அண்டிராய்ட் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் இந்த அம்சங்களை பயன்படுத்த முடியாது.

கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படிக்காததாக குறிக்கவும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. எனினும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply