இரண்டாவது இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி இரட்டைச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்கும் மெக்கல்லம் ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிக்கனவு தகர்ந்தது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் வெல்லிங்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 571 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. மிக எளிதான வெற்றியை இந்திய அணி பெற்றுவிடும் என்ற கனவை தகர்த்தார் மெக்கல்லம். அவர் 281 ரன்கள் எடுத்து இன்னும் ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்கு உறுதுணையாக ஆடிய வாட்லிங் 124 ரன்கள் எடுத்தார்.

இன்னும் 4 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 325 ரன்கள் இந்திய அணியின் ஸ்கோரைவிட அதிகம் பெற்றிருப்பதால் நியுசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டத்தை பொறுத்து இந்த ஆட்டத்தின் முடிவு அறியப்படும்.

Leave a Reply