பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்களில் ஒருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இரண்டாவது வாரமாக இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் மிகக் குறைந்த அளவில் வாக்குகளை அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் அபினய் மற்றும் சுருதி ஆகியோர்களும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும், சின்னப்பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது