விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த்?

விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த்?

Rajinikanthவிஜய் நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ மற்றும் ‘காவலன்’ உள்பட பல மலையாள திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்திக். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’

மம்முட்டி, நயன்தாரா நடித்த இந்த படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், இந்தப் படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் இயக்குனர் சித்திக், மலையாள மனோரமா என்ற பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் நடித்த நயன்தாரா தமிழ் ரீமேக் படத்திலும் நாயகியாக நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கும் நயன்தாரா தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply