கார்த்தி-மணிரத்னம் படத்தில் இணைந்தார் டெல்லி கணேஷ்

கார்த்தி-மணிரத்னம் படத்தில் இணைந்தார் டெல்லி கணேஷ்

delhi ganeshகடந்த ஆண்டு வெளியான வெற்றி படமான ‘ஓகே கண்மணி’ படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி வரும் அடுத்த படத்திற்கு ‘காற்று வெளியிடை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் கவிதை வார்த்தைகளில் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணிரத்னம் பாரதியாரின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரியை தனது பட டைட்டிலுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விமான பைலட் வேடத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கவுள்ளார். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல கன்னட நடிகை ஷராதா ஸ்ரீநாத், காமெடி வேடத்தில் ஆர்ஜே பாலாஜி ஆகியோர்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பழம்பெரும் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாகவும், அவர் தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Delhi Ganesh joins in Maniratnam’s next

Leave a Reply