shadow

zimbabweஜிம்பாவே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி-20 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்

ஜிம்பாவே அணி 145/7    20 ஓவர்கள்

சிபாபா        67
மஸாகட்ஸா    19
வில்லியம்ஸ்    17

இந்தியா        125/9    20 ஓவர்கள்

உத்தப்பா        42
பின்னி        24
சாம்சன்        19

ஆட்டநாயகன் சிபாபா (ஜிம்பாவே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *