shadow

zimbabweஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ரூ.64.10 ஆக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு இன்னும் சில நாடுகளில் குறைவாகவும், அதிகமாகவும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிம்பாவே நாட்டின் டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து ஒரு அமெரிக்க டாலரை ஜிம்பாவே மக்கள் வாங்கவேண்டும் என்றால் 35,000 மில்லியன் மில்லியன் ஜிம்பாப்வே டாலர்கள் கொடுக்க வேண்டும். இந்த மதிப்பை எண்ணில் பார்க்க வேண்டும் என்றால் 35,000,000,000,000,000 என்பதே சரியாக இருக்கும்.

தற்போதைய நிலையில் ஜிம்பாவேவில் பணபரிமாற்ற மதிப்பு மிகக்கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜிம்பாவே நாட்டின் டாலர்கள் வெறும் காகிதமாக மாறிவிட்டதாகவே அந்நாட்டு மக்கள் கருதி வருகின்றானர். 

ஒருவர் 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர்கள் வைத்திருந்தால் 40 அமெரிக்க செண்ட்கள்தான் அவருக்கு கிடைக்கும்.  எனவே பயனற்ற தங்கள் நாட்டு டாலரை முற்றிலும் ஒழிக்க அதிபர் ராபர்ட் முகாபே முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply