ஜீரோ டிகிரி குளிர்: மூணாறில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மூணாறு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஜீரோ டிகிரி குளிர் அடிப்பதை அடுத்து அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளன.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அவஸ்தை படுகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தென்னிந்தியாவிலும் சில பகுதிகளில் கடும் குளிரடித்து வருகிறது குறிப்பாக மலைப்பகுதியான மூணாறு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஜீரோ டிகிரி இருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் ஜீரோ டிகிரியில் உள்ளது.
இதனை அடுத்து அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.