‘பில்லா’ பட நடிகையுடன் யுவராஜ்சிங் நிச்சயதார்த்தம்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங்கிற்கும் பிரபல பாலிவுட் நடிகை Hazel Keech அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பாலியில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், வரும் 2016ஆம் தேதி பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை Hazel Keech, கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் விஜய் நடித்த ‘காவலன்’ படத்தின் இந்தி ரீமேக் படமான ‘பாடிகார்டு’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த நடிகை Hazel Keech ஒரு நல்ல டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply
You must be logged in to post a comment.