விஜய்சேதுபதியின் அடுத்த படத்தயாரிப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தயாரிப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா

விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணி இணையவுள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை யுவன்சங்கர் ராஜாவே தனது ‘ஒய் நாட் ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே யுவன்ஷங்கர்ராஜா, நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் இது அவருடைய இரண்டாவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா தனது தந்தை இளளயராஜாவுடன் இணைந்து இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட பிற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘மாமனிதன்’ என்று வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply