3 தலைநகர் அறிவித்த முதல்வருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்!

ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகர் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதன்படி அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை செயல்பாட்டு தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு ஒருபக்கம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மூன்று தலைநகர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன,

Leave a Reply