தாய்லாந்து நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) பதவி விலக வேண்டும் என்றும் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் என்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்ய தாய்லாந்து பிரதமர் நேற்று பாங்காக் நகரில் 37 கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பல கட்சிகள் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் பிரதான எதிர்க்கட்சி தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் வன்முறையை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைக்கலாம் என அரசுக்கு ஆலோசனை கூறியது. ஆனால் இதை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார்.

37 கட்சிகள் கூட்டத்தில் பெரும்பான்மையான கட்சிகள் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்றும், தேர்தலை ஒத்தி வைக்க அரசுக்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ அதிகாரம் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் நடந்த வன்முறையில் சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Leave a Reply