shadow

vairamuthuநேற்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டிருந்ததை அடுத்து யோகா குறித்து பிரபல கவிஞர் வைரமுத்து கல்வி விழா ஒன்று சுவைபட பேசியுள்ளார்.

யோகா என்ற உடற்பயிற்சியை மதத்திற்குள் முடக்காதீர்கள். ஐ.நா. சபையின் அறிவிக்கையின்படி இந்திய பிரதமர் யோகா தினம் கொண்டாடி லட்சக்கணக்கானவர்களை யோகா பயிற்சிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதனை வரவேற்கிறேன். யோகா என்ற உடற்பயிற்சியை மதத்திற்குள் முடக்காதீர்கள். யோகா என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் என்பது பொதுவுடைமையாகும். யாருக்கெல்லாம் சுவாசம் இருக்கிறதோ, நுரையீரல் இருக்கிறதோ, முதுகுத்தண்டு இருக்கிறதோ, உடல் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் யோகா சொந்தம்.

ஆகவே இதனை ஒரு மதத்திற்குள் கொண்டு வரவேண்டாம் என்பதையே ஒரு கவிஞன் விடுக்கும் கோரிக்கை. சூரிய நமஸ்காரம் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை என்று வருமானால் நீங்கள் உங்கள் முன்னோர்களை வணங்குகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஐந்து ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில்தான் வைரமுத்து யோகா குறித்து பேசியுள்ளார். இந்த பகுதியில்தான் வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகப்பட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply