ரூ.30 கோடி குறைந்த டாஸ்மாக் விற்பனை:

என்ன காரணம்?

தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 163 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை ஆகின

ஆனால் நேற்று டாஸ்மாக் விற்பனை 30 கோடி ரூபாய் குறைந்துவிட்டதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன நேற்று முன்தினம் 163 கோடி விற்பனையான நிலையில் நேற்று 133 கோடி மட்டுமே விற்பனை ஆனதாக செய்திகள் வெளியாகி உள்ளது

உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூட வாய்ப்பில்லை என்பதால் அன்றைய தேவைக்கு மட்டும் மது பிரியர்கள் மதுக்களை வாங்கியதாகவும் இதனால் டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கும் மேல் டாஸ்மாக் விற்பனை ஆகியுள்ளது மது பிரியர்கள் அதிகமாக இருப்பதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply