சேலம் மாவட்டம் ஏற்காடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் 2500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் வெளியூர்காரர்கள் யாரும் தங்கி இருக்கக் கூடாது.  வாக்குப்பதிவின் போது ஆயுதம் தாங்கிய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.

Leave a Reply