shadow

TamilDailyNews_2599712610245

Xolo நிறுவனம் அதன் புதிய ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அடைப்படை சார்ந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனான Xolo ப்ரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.5,699 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xolo ப்ரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட Xolo ப்ரைம் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. Xolo ப்ரைம் ஸ்மார்ட்போனில் 218ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி 400 MP ஜிபியூ மற்றம் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6582M ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xolo ப்ரைம் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் (VGA) முன் எதி்ர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 1800mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 135x68x9.5mm பரிமாணங்களை கொண்டுள்ளது. இது பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் கோல்ட் வண்ண வகைகளில் வருகிறது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 3ஜி, ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b/ g/ n, ஜி.பி.எஸ்/எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் v4.0, FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி 2.0, ஜிபிஆர்எஸ்/எட்ஜ் மற்றும் ஜிஎஸ்எம் ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், அச்செலேரோமீட்டர், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

Xolo ப்ரைம் ஸ்மார்ட்போன் முக்கியகுறிப்புகள்:

  • டூயல் சிம்,
  • 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6582M ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3 மெகாபிக்சல் முன் எதி்ர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b/ g/ n,
  • ஜி.பி.எஸ்/எ-ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத் v4.0,
  • FM ரேடியோ,
  • மைக்ரோ-யுஎஸ்பி 2.0,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • ஜிஎஸ்எம்,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 1800mAh பேட்டரி.

Leave a Reply