shadow

images (11)

தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் பல்வேறு சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.ஏ.எல்.எல்.பி.,(3 ஆண்டுகள்), எல்.எல்.பி., (5 ஆண்டுகள்), முதுநிலைப் படிப்பான எல்.எல்.எம்., (2 ஆண்டுகள்) உட்பட ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. தவிர, தொலைநிலைக் கல்வி முறையில் எம்.சி.எல்., முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இதர விபரங்கள்: படிப்புகளைப் பொறுத்து கல்வித் தகுதி, வயது, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் தேதி ஆகியவை வேறுபடுகின்றன. இவை குறித்த அனைத்து விபரங்களுக்கும் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

இணையதள முகவரி: www.tndalu.ac.in

 

Leave a Reply