இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு முன்னேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நேற்றுவரை ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இன்று திடீரென நான்காவது இடத்திற்கு முன்னேறி இருப்பதால் இந்திய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசில் நாடும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ள நிலையில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்தியாவில் 298,283 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதும், கொரோனாவால் 8,501 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply