shadow

கடலின் நடுவே கட்டி முடிக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாலம்:

உலகின் மிக நீளமான கடல் பாலத்தின் மீது மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் சூஹூஹாய் மற்றும் மாக்காவு ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக சீனா 55 கி.மீ நீளத்தில் கடல் பாலம் ஒன்றை கட்டி வந்தது.

இந்திய மதிப்பில் ரூ.1060 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. சீனாவில் அதிகரித்து வரும் புகை மாசுவால், அந்நாடு வாகனங்களுக்கு மின்சாரத்தை எரிசக்தியாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக பல பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன், மின்சார வாகன தயாரிப்பிற்கான ஒப்பந்ததை சீனா மேற்கொண்டுள்ளது. தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஹாங்காங்- சூஹூஹாய்-மாக்காவு கடல் பாலத்தில் மின்சார வாகன பேட்டரிகளுக்கான 550 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

Leave a Reply