உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று; கொலம்பியா தகுதி

32 அணிகள் பங்கேற்கும் 20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள்  நடந்து வருகிறது.

இதன் சி பிரிவில் ஜெர்மனியும், இ பிரிவில் சுவிட்சர்லாந்தும் உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்தன. இதே போல் தென் அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் கொலம்பியா-சிலி அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த பிரிவில் இதுவரை 15 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் கொலம்பியா அணி 8 வெற்றி, 3 டிரா, 4 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பபை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.