உலகின் மிக இளம் பிரதமர் ஆகும் பெண்

உலக அளவில் இளவயது பிரதமர் என்கிற பெருமையை பின்லாந்தின் சன்னா மரின் என்ற பெண் பெறவுள்ளார்.

பின்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் 34 வயதான சன்னா மெரின் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் அடுத்த வாரம் பிரதமர் பதவி ஏற்க உள்ளார்.

பின்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டி ரைய்னி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த சன்னா மரின் தற்போது ஐந்து கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பொறுப்புக்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பின்லாந்தில் நடைபெற்ற அஞ்சல் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் ஆன்டி ரைய்னி பதவி விலகியதை அடுத்து தற்போது புதிய பிரதமராக சன்னா பொறுப்புக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் உலகின் இளம் பிரதமராக இருந்தவர் உக்ரைன் நாட்டின் Oleksiy Honcharuk என்பவர் இருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply