உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியுள்ளது என்பதால் உலக நாடுகளிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் சற்றுமுன் உலக அளவில் கொரோனாவினால் பாதிப்பு அடைந்தவரகளின் எண்ணிக்கை 24,06,240 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,004ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்த்க்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,24,914ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply