உலகக்கோப்பை மல்யுத்தப் போட்டி அமெரிக்காவில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில், இன்று 5வது இடத்துக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி, மங்கோலிய அணியுடன் மோதியது. இறுதியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் மங்கோலிய அணியிடம் தோல்வியை தழுவியது.. இதனால் இந்திய அணிக்கு ஆறாவது இடமே கிடைத்தது.
இந்த போட்டியில் இரான் அணி முதலிடத்தையும், ரஷ்யா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
5வது இடத்தை மங்கோலியாவும், 6வது இடத்தை இந்தியாவும், 7வது இடத்தை துருக்கியும், 8வது இடத்தை ஜப்பானும், 9வது இடத்தை ஜார்ஜியாவும், பத்தாவது இடத்தை அர்மீனியாவும் கைப்பற்றியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.