மகளிர் உலகக்கோப்பை: அரையிறுதி விளையாடாமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா

மகளிர் உலகக்கோப்பை: அரையிறுதி விளையாடாமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா

மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற இருந்த அரையிறுதி உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது

இதனையடுத்து இந்திய அணி லீக் போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்றிருந்த காரணத்தினால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

இங்கிலாந்து அணியின் லீக் போட்டிகளில் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து அரையிறுதி போட்டியில் விளையாடாமலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply