இந்தியாவின் அரையிறுதி கனவு கலைத்த ஆப்கானிஸ்தான்!

இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது

இந்தியா அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் அணி இன்று வெற்றி பெறவேண்டும் என்பது தெரிந்ததே. ஆனால் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதும் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.