shadow

உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா தொடர்ந்து முதலிடம்

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் ஸ்பெயின் நாட்டை வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் டிரா செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் போல் கோல் அடிக்கவில்லை.

இதனை அடுத்து இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல் போட்டியில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று உள்ளதால் டி பிரிவில் இன்னும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 19ஆம் தேதி இந்தியா மற்றும் வேல்ஸ் அணிகள் மோத உள்ளன.