shadow

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில் அபார வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் மற்றும் செர்பிய அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது.

இதில் பிரேசில் 2 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. செர்பிய அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த மற்றொரு போட்டியில் போர்ச்சுகல் – கானா அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று மாலை வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான போட்டியும், கத்தார் மற்றும் செனேகல் அணிகளுக்கும் இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது