உலக கொரோனா 18.52 லட்சம் மக்களுக்கு கொரோனா

மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில்.. அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் 18.52 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.52 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் * கொரோனா பாதிப்பு காரணமாக 1.14 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 4.23 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரித்துள்ளது. இது உலக கொரோனா பாதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகம் ஆகும். மேலும் சில நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

ஸ்பெயின் – 1,66,831

இத்தாலி – 1,56,363

பிரான்ஸ் – 1,32,591

ஜெர்மனி – 1,27,854

இங்கிலாந்து – 84,279

சீனா – 82,160

ஈரான் – 71,686

Leave a Reply