உலகிலேயே பெண்கள் அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளில் பெண்கள் வியத்தகு சாதனைகள் செய்து வரும் இந்த நூற்றாண்டில் இந்திய பெண்கள் சிகரெட் பிடிப்பதில் சாதனை செய்துள்ளனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் உலகிலேயே பெண்கள் அதிகம் சிகரெட் பிடிப்பதில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் உலக அளவில் சிகரெட் பழக்கம் குறைந்துள்ளதாகவே அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த 1980ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 33.8% மக்கள் புகை பிடித்தனர். ஆனால் தற்போது 23% மக்கள்தான் புகைபிடிப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இந்தியாவில் 31% ஆண்களும், 6% பெண்களும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. உலக அளவில் பார்த்தால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி சிகரெட் விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஒரு லட்சம் கோடி என்றால் எவ்வள்வு என்று தெரியுமா? 1,000,000,000,000 இதுதான் ஒரு லட்சம் கோடி.
Leave a Reply
You must be logged in to post a comment.