shadow

4000 கோடிக்கு ஏலம் போகும் பெண்கள் ஐபிஎல் அணிகள்: பரபரப்பு தகவல்

பெண்கள் ஐபிஎல் அணிகளை ஏலம் விடுவதன் மூலம் பிசிசிஐக்கு 4000 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பெண்கள் ஐபிஎல் அணி ரூபாய் 500 கோடி முதல் 800 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்கள் ஐபிஎல் போட்டி போலவே இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிகளின் ஏலம் நாளை நடைபெற உள்ளதாகவும் ரூபாய் 5 லட்சம் முன்பணம் செலுத்தி சுமார் பத்து நிறுவனங்கள் ஏலம் எடுக்க தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.