shadow

சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பதில் மனு தாக்கல்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தற்போது கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த பதில் மனுவில் பெண்களை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது.

இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கட்நத 2006ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த மாதம் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 1,500 ஆண்டுகளாக அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லவில்லை என்று சபரிமலை நிர்வாகம் கூறுவதற்கு ஆதாரங்கள் உண்டா? பெண்கள் கோவிலுக்குள் செல்வதை எந்த அடிப்படையில் தடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், வயது, பாலினம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அரசியல் சட்டத்தின்படி பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒழிய அவர்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து கேரள அரசு ஒரு வாரத்துக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்றுசுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, ‘வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை மாற்ற முடியாது என்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது” என்றும் கூறியுள்ளது.

Leave a Reply