திருட்டு தொழிலில் இறங்கிய குடும்ப பெண்கள்

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பொது மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காரணத்தினால் திருடும் அளவுக்கு சிலர் துணிந்துள்ளனர்.

உழைத்து சம்பாதித்து பிழைத்து கொண்டிருந்த ஒருசிலர் தற்போது வேறு வழியின்றி திருட்டு தொழிலில் இறங்கி உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் குடும்ப பெண்கள் இருவர் இங்கிலாந்தில் மால் ஒன்றுக்கு சென்று பொருட்களை வாங்குவது போல் நடித்து தங்கள் கைப்பைகளில் பொருட்களை திருடி வைத்துள்ளதாக தெரிகிறது
இது குறித்து சிசிடிவி கேமராவில் கண்டுபிடித்த மால் பணியாளர்கள் உடனடியாக அந்த பெண்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்

போலீசார் அந்த பெண்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இருப்பினும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply