shadow

பொதுமக்களை அடிமையாக்கும் போக்கிமோன் விளையாட்டு. டீச்சர் வேலையை உதறிய இளம்பெண்

pokimonவீடியோகேமில் மணிக்கணக்கில், வாரக்கணக்கில் அடிமையாக இருந்த நிலை மாறி மக்களின் பார்வை தற்போது போக்கிமோன் விளையாட்டில் திரும்பியுள்ளது. இந்த விளையாட்டில் தத்ரூபமாக நாமே விளையாடுவது போல் இருப்பதும், ஜிபிஎஸ் மூலம் செயல்படும் இந்த விளையாட்டால் விளையாடுபவர்களுக்கு வருமானமும் குவிந்து வருவதால் ஏராளமானோர் தற்போது இந்த விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இந்த விளையாட்டின் மூலம் கிடைக்கும் புள்ளிகளை விற்பதால் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் ஒருசிலர் பணம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் லண்டனை சேர்ந்த இளம்பெண் சோபியா என்பவர் பார்த்து கொண்டிருந்த ஆசிரியர் பணியை உதறி தள்ளிவிட்டு இந்த விளையாட்டிலேயே மூழ்கி உள்ளாராம்.

நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் விளையாடும் இவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறதூ.

இதுகுறித்து சோபியா கூறும்போது, “இந்த விளையாட்டின் மீது மக்களுக்கு உள்ள மவுசு குறைந்துப்போய், மதிப்பு மங்கும்போது நான் மீண்டும் ஆசிரியை வேலைக்கு திரும்பி விடுவேன். அதுவரை ஒருகை ஆடித்தான் பார்ப்போமே’ என்று உற்சாகமாக கூறுகிறார்.

Leave a Reply