shadow

கண் மை பயன்படுத்தியதால் கண் பார்வை இழந்த இளம்பெண்

பெண்கள் கண் மை போடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் காலாவதியான கண்மையை பயன்படுத்தியதால் ஆஸ்திரேலியாவில் உள்ள இளம்பெண் ஒருவர் தனது கண்பார்வையை இழந்த பரிதாபமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார் என்பவர் தினசரி கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு கண் எரிச்சல் இருந்ததால் மருத்துவரை அணுகினார்.

அவரது கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி என்பவர் காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாகவும், அவர் பயன்படுத்திய கண் மை 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது என்றும் அதன் காரணமாக கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறியுள்ளார்.

எனவே பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. கண் பார்வை குறைந்து கொண்டே இருக்கிறது. தற்போது கண் பார்வை சிறிதளவே உள்ளது. இப்போது அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி நடக்கிறார். விரைவில் முழு பார்வையும் பறிபோகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply