புற்றுநோயாளி போல் நடித்து 50ஆயிரம் டாலர் நிதி திரட்டிய பெண் கைது

புற்றுநோயாளி போல் நடித்து 50ஆயிரம் டாலர் நிதி திரட்டிய பெண் கைது

சமூக வலைத்தளங்களில் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நிதியுதவி செய்யுமாறு பல விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பலரும் பரிதாபப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி அனுப்பி வருகின்றனர். ஆனால் இதிலும் தற்போது முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் தனக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்து ரூ.50000 வரை முறைகேடாக நிதி திரட்டியது தெரியவந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகைப்படத்துடன் இவ்வாறு நோய் இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டுவது தற்போது பெருகி வருவதாகவும், நிதியளிப்பவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு, உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களதானா என்பதை அறிந்துகொண்டு நிதியுதவி செய்யும்படி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply