கணவர் இன்றி கடைவீதிக்கு சென்ற பெண்ணை தலைவெட்டி கொன்ற தலிபான் தீவிரவாதி

கணவர் இன்றி கடைவீதிக்கு சென்ற பெண்ணை தலைவெட்டி கொன்ற தலிபான் தீவிரவாதி

கடந்த 1998ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இபோல் மாகாணம் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இங்கு தலிபான்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றம் பெருமளவு நடைபெறும் பகுதியாக இந்த பகுதி உள்ளது.

இந்நிலையில் நேற்று கணவர் துணையின்றி தனியாக கடை வீதிக்கு சென்ற ஆப்கன் பெண் ஒருவர், தலிபான் தீவிரவாதியால் தலை துண்டித்து கொல்லப்படார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை தலிபான் தீவிரவாதி ஒருவர் இடைமறித்து எங்கே செல்கிறாய் என்று கேட்டதாகவும் அதற்கு அந்த பெண் கடைவீதிக்கு செல்வதாகவும் கூறினாராம். கணவர் துணையின்றி  கடைவீதிக்கு தனியாய் ஏன் வந்தாய் என்று கேட்ட அந்த தீவிரவாதி திடீரென தனது கத்தியை எடுத்து அந்த பெண்ணின் தலையை துண்டித்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

தலிபான் தீவிரவாதிகளால் தொடர்ந்து பல பெண்கள் இந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு ஆப்கன் அரசு விரைவில் தீர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply