ஊரடங்கை மீறியவர்களை தடுத்த போலீஸ்: சட்டையை பிடித்த பெண்: தெலுங்கானாவில் பரபரப்பு

ஊரடங்கை மீறியவர்களை தடுத்த போலீஸ்: சட்டையை பிடித்த பெண்: தெலுங்கானாவில் பரபரப்பு

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாநில அரசு எச்சரித்துள்ள நிலையில் தெலுங்கானாவில், ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கி்ல் வந்தவர்களை போலீஸ் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த பெண் போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாபட் என்ற பகுதியி உள்ள சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனபோது ஒரு பைக்கில் ஒரு பெண் தனது மகனுடன் வந்தார். அப்போது அவர்களை தடுத்த போலீசார் ஊடரங்கை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்து அபராதம் கட்ட சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த பெண், போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து ஆவேசமாக தகராறு செய்தார். இதுகுறித்த வீடியோ காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.