சோனியா, ராகுல், பிரியங்கா இல்லாத காங்கிரஸ் வெற்றி பெறும்: பானுகோம்ஸ்

சோனியா, ராகுல், பிரியங்கா இல்லாத காங்கிரஸ் வெற்றி பெறும்: பானுகோம்ஸ்

காங்கிரஸ் சந்திக்கும் பிரச்னைகளின் அடிப்படையே சோனியா, ராகுல், பிரியங்கா தான் என்றும், இவர்கள் மூவரும் இல்லாத காங்கிரஸ் நிச்சயம வெற்றிபெறும் என்றும் அரசியல் விமர்சகர் பானுகோம்ஸ் கூறியுள்ளார். ஆனால் இதற்கான வாய்ப்பு காங்கிரஸ் கட்சியில் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பானுகோம்ஸ், ஜனநாயகம், மக்கள் தீர்ப்பு என்று சொல்ல குடும்ப அரசியல் செய்து வரும் கட்சிக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் பழைய தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய ரத்தமுள்ள இளைஞர்களை கொண்டு வரவேண்டும் என்றும் இதைத்தான் இந்திராகாந்தி செய்தார் என்றும் அதுபோன்று ஒரு மாற்றம் அக்கட்சிக்கு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply