புதுடெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ. சோதனை ஓட்டத்தில் திடீர் விபத்து

புதுடெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ. சோதனை ஓட்டத்தில் திடீர் விபத்து

metro-railடெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் வரும் 2017ஆம் ஆண்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

முதல்முயற்சியான சோதனை ஓட்டத்திலேயே விபத்து ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

ஜானகிபுரி – பொடானிகல் கார்டர் பகுதிகளுக்கு இடையே நடந்த இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply