குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பழங்கள் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வது மக்களிடையே பழக்கவழக்கத்தில் உள்ள ஒன்று. ஆனால் இந்த குளிர்காலங்களில் விளையக்கூடிய பழங்கள் சந்தைகளில் மலிவான விலையில் கிடைக்கும். மேலும் குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்கள் அனைத்தும் தற்போது ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மைக் கொண்டவை. எனவே இந்த குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்களை சாப்பிடுவதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

ஆப்பிள்
ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து தள்ளி இருக்க முடியும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு மற்றும் இதர சிட்ரஸ் பழங்கள் குளிர்காலத்தில் அதிகம் விளையக்கூடிய பழங்கள். எனவே இதனை தினமும் சாலட், ஜூஸ் என்று போட்டு உட்கொண்டு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுகளில் இருந்து விலகி இருங்கள். அதுமட்டுமின்றி தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவோடு இருக்கும்.

மாதுளை
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் இது கலோரி குறைவான பழம். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது.

குருதிநெல்லி
குருதிநெல்லி ஒரு பன்முகப் பழம். ஏனெனில் இதனை ஜாம், ஜூஸ், சாஸ், உலர்ந்த நிலையில் என்று பலவாறு சாப்பிடலாம். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதோடு, இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெரி பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

Leave a Reply