தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மதுவிற்பனைக்கு அனுமதி

பச்சை மண்டல பகுதி எது?

நாடு முழுக்க மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பச்சை மண்டலங்களில் மட்டும் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ஒரே பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியில் மது விற்பனை தொடங்கப்படும்

ஆனால் மது கடைகளில் அமர்ந்து குடிக்கும் பார்களுக்கு அனுமதி கிடையாது என்றும், மதுவை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று குடிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவை வாங்கும் போது 6 அடி சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், மதுகடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மது குடிக்காமல் இருக்கும் மதுப்பிரியர்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.