shadow

ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் நாறிப்போன தேஜாஸ் ரெயில். அதிர்ச்சியில் நிர்வாகம்

மும்பை மற்றும் கோவா இடையிலான அதிநவீன சொகுசு ரயிலை கடந்த 22ஆம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார். மும்பை சிஎஸ்டி – கோவாவின் கர்மாலி இடையே செல்லும் இந்த சொகுசு ரயிலில் விமானத்தில் உள்ளது போன்ற இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையின் பின்னும் அதற்குப் பின் இருப்பவர்களின் வசதிக்காக எல்சிடி திரை, ஹெட்போன் ஆகியன உள்ளன. வைபை இணைய வசதி, தொடாமலேயே தண்ணீர் வரும் குழாய் எனப் பல்வேறு வசதிகள் உள்ளது

வாரம் மூன்று முறை இயங்கும் இந்த ரயில் முதல் பயணத்தை முடித்தபோதே பயணிகளால் நாஸ்தி ஆன தகவல் அறிந்து ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரயிலில் உள்ள ஹெட்போன்கள் திருடப்பட்டதாகவும், சொகுசு இருக்கைகளின் பின்னால் உள்ள எல்சிடி திரைகளையும் உடைத்து நொறுக்கியுள்ளதாகவும், அனைத்துக்கும் மேலாக கழிவறைகளைப் பயன்படுத்திவிட்டு முறையாகத் தண்ணீர் திறந்துவிடாமல் அசுத்தமாக்கியுள்ளதையும் கண்டு ரயில்வே நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரயிலை மேற்கொண்டு இயக்குவதும் நிறுத்துவதும் பயணிகள் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

Leave a Reply