shadow

விண்டோஸ் 10 அப்டேட் இலவசம் : மைக்ரோசாப்ட் அறிவிப்பு

விண்டோஸ் 10 வாடிக்கயாளர்களுக்கு ‘கிரியேட்டர்ஸ் அப்டேட்’ இலவசம் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் கணிணிகளுக்குகான இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இந்த நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. உலகளவில் விண்டோஸ் இயங்குதளத்தை தான் கணிணி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு விண்டோஸ் 10 ஆகும். இந்த விண்டோஸ் 10-ல் உள்ள “கிரியேட்டர்ஸ் அப்டேட் ” என்ற மேம்படுத்தபட்ட பதிப்பை இலவசம் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அப்டேடை பெற விண்டோஸ் அப்டேட் செட்டிங்கில் ‘ஆட்டோமேட்டிக் அப்டேட்(Auomatic Update)’ என்ற ஆப்சனில் இருக்கவேண்டும் . இல்லையேன்றால் மேனுவலாகவும் (Manual) அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய கிரியேட்டர்ஸ் அப்டேட்-ஐ அப்டேட் செய்வதன் மூலம் 3டி, மிக்சட் ரியாலிடி, 4கே கேமிங் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற முடியும் என்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply