அஜீத்தை மருத்துவமனையில் சென்று பார்த்தாரா விஜய்? பரபரப்பு தகவல்

அஜீத்தை மருத்துவமனையில் சென்று பார்த்தாரா விஜய்? பரபரப்பு தகவல்
ajith
‘வேதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த கையோடு அஜீத் தனது நீண்ட நாள் பிரச்சனையான முழங்கால் வலி மற்றும் தோள் வலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 6 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ள அஜீத், தனது வீட்டில் பூரண ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அஜீத் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் சேர்ந்தபோது அந்த மருத்துவமனைக்கு விஜய் நேரில் சென்று நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. அஜீத்தையும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டரையும் விஜய் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியானது

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் ஒரு மருத்துவமனை திறந்தபோது அஜித், விஜய் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அந்த திறப்பு விழாவுக்கு விஜய் காலையிலும், அஜித் மாலையும் வந்து கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது அஜீத், விஜய் ஆகிய இருவரும் தனித்தனியாக டாக்டருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள்தான் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாகவும், தற்போது அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது விஜய் சந்தித்துள்ளதாக தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply