shadow

‘தெறி’ டீசர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ‘தெறி’ டிரைலர்
theri-1
இளையதளபதி விஜய் நடித்த படம் ஒரு சாதனையை நிகழ்த்தியது என்றால் அந்த சாதனையை மீண்டும் விஜய் படம்தான் முறியடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்போல தெரிகிறது.

கடந்த மாதம் வெளிவந்து விஜய்யின் ‘தெறி’ திரைப்படத்தின் டீசர் சுமார்  பத்து லட்சம் பார்வையாளர்களையும், மூன்று லட்சம் லைக்குகளையும் நெருங்கிவிட்டது. இந்த சாதனையை வேறு எந்த படம் முறியடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இதே படமே முறியடிக்கும் என தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த ‘தெறி’ படத்தின் டிரைலருக்கு இதுவரை சுமார்  6 லட்சம் பார்வையாளர்களும் 2 லட்சம் லைக்ஸ்களும் கிடைத்துள்ளது எனவே ‘தெறி’ படத்தின் டீசர் சாதனையை ‘தெறி’ படத்தின் டிரைலர் மிக விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இன்னும் 15 தினங்களுக்கு மேல் ரிலீஸ் தேதி இருப்பதால் அதுவரை ‘தெறி’ டிரைலர் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட வாய்ப்பு உள்ளது. விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Leave a Reply