கங்கையை சுத்தப்படுத்த 10 ஆண்டுகள் தேவை: அமைச்சர் உமா பாரதி

கங்கையை சுத்தப்படுத்த 10 ஆண்டுகள் தேவை: அமைச்சர் உமா பாரதி

பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதில் இருந்தே கங்கையை சுத்தப்படுத்த வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கெனவே ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கங்கையை சுத்தப்படுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாரணாசியில் நேற்று நடைபெற்ற கங்கை தசரா விழாவில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கங்கை நதியை முழுமையாக சுத்தம் செய்து முடிக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

கங்கைக் கரையிலுள்ள தொழிற்சாலைகள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய பணியாக உள்ளது என்றும், குறிப்பாக தோல்பதனிடும் தொழிற்சாலைகளை கான்பூருக்கு மாற்ற உத்தரப் பிரதேச அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறிய அமைச்சர் உமாபாரதி கங்கையை தூய்மைப்படுத்தி அதனைப் பராமரிப்பதை வலியுறுத்தி, கங்கோத்தியிலிருந்து கங்கா சாகர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

மீண்டும் பாஜக ஆட்சி வந்து கங்கையை சுத்தப்படுத்தும் பணியை முடிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.