shadow

கொறடா உத்தரவை மீறியதால் ஓபிஎஸ் பதவி பறிக்கப்படுமா?

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால் கொறடாவின் உத்தரவை மீறி ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளதால் அவர்கள் மீது கட்சித்தாவல் சட்டம் பாய வாய்ப்பு உள்ளது. சபாநாகர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் 11 பேர்களும் எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும்

ஆனால் இப்போதைக்கு இந்த நடவடிக்கை வேண்டாம் என்று கார்டன் வட்டாரம் கருதுகிறதாம். 11 எம்.எல்.ஏக்கள் பதவியை பறித்தால் வரும் இடைத்தேர்தலில் அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் திமுக ஆட்சி அமைக்க முயலும் என்பதாலும் இப்போதைக்கு இந்த விவகாரத்தை தொட வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம்

எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அரசு தற்போது சசிகலாவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக நடவடிக்கைகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஓட்டு போட்ட மக்களை எந்த அரசு கவனிக்கும் என்றுதான் தெரியவில்லை.

Leave a Reply