திருச்செந்தூரில் இன்று சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவாரா?

திருச்செந்தூரில் இன்று சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவாரா?

sasikala1அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலாபுஷ்பா இன்று திருச்செந்தூரில் நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்செந்தூர் வரவுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியின்போதோ அல்லது நிகழ்ச்சி முடிந்த பின்னரோ சசிகலாபுஷ்பா கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர்கசசிகலாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து நமுனா தாக்கல் செய்து சசிகலாபுஷ்பா நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றப் பதிவாளர் மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக சசிகலா புஷ்பா இன்று கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply