அதிமுகவில் இருந்து விலகுகிறாரா நாஞ்சில்? பரபரப்பு தகவல்

அதிமுகவில் இருந்து விலகுகிறாரா நாஞ்சில்? பரபரப்பு தகவல்
nanjil sampath
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அதிமுக தலைமைக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வகையில் ஒருசில கருத்துக்களை கூறியதால் அதிரடியாக கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தன்னை கட்சிப்பதவியில் இருந்து நீக்கியது குறித்து நாஞ்சில் சம்பத் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில்  அதிமுக தலைமைக்கு மனம் திறந்து ஒருசில கருத்துக்களை கடிதமாக நாஞ்சில் எழுதியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தனது நிலைப்பாட்டையும் மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு தான் காட்டிய விசுவாசம் குறித்தும் மனதை உருக்கும் வகையில் கூறியுள்ளாராம்

தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அவருக்கு மீண்டும் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்படவில்லையென்றால், தனது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்றும் தனக்கு கட்சியில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும்படியும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக தெரிகிறது.

ஒருவேளை தனக்கு மீண்டும் பதவி தரப்படவில்லையென்றால், அதிமுகவினரே அவரை பொதுக் கூட்டங்களுக்கு பேச அழைக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டுள்ள நாஞ்சில், தனது கடிதத்திற்கு அதிமுக தலைமை செவிசாய்க்கவில்லை என்றால் அதிமுகவில் இருந்து விலகி விடும் மீண்டும் தனது தாய் கழகமான திமுகவுக்கு செல்லவிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் வேறு நெருங்கி வரும் வேளையில் ஊர் ஊராக நாஞ்சில் சென்று மைக் பிடித்தால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று திமுக கருதுவதாகவும், நாஞ்சில் சம்பத்தை திமுகவுவுக்கு வந்தால் ஏற்படும் சாதக பாதகங்ளை திமுக தலைமை அலசி ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாஞ்சிலாரின் புதிய முடிவு என்ன என்பது குறித்து விரைவில் பரபரப்பான தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.