shadow

மீண்டும் திருவாரூரில் போட்டியிட கருணாநிதி திட்டமா?
karunanidhi
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் அதிக முறை தேர்தலில் போட்டியிட்டவர். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பெற்ற ஒரே தலைவராக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த 1957ஆம் ஆண்டு முதல் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். கர்ம வீரர் என்றழைக்கப்பட்ட காமராஜரை கூட தமிழக மக்கள் ஒரு தேர்தலில் தோற்கடித்தனர். ஆனால் கடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை அனுதாப அலையில் கூட கருணாநிதி வெற்றி பெற்றார். தி.மு.க. பலமுறை தோல்வியை சந்தித்த போதிலும் கருணாநிதியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை.

சைதாப்பேட்டை, சேப்பாக்கம், துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலை சந்தித்த கருணாநிதி முதல் முறையாக கடந்த 2011 தேர்தலில் தனது சொந்த தொகுதியான திருவாரூரில் கடந்த முறை போட்டியிட்டு பதிவான ஓட்டுக்களில் 63 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வரலாற்றில் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் இந்த தொகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் தேர்தலில்மீண்டும் திருவாரூரில் போட்டியிட முடிவு அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் வயது முதுமை காரணமாக அவரை பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அதற்கு கருணாநிதி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. திருவாரூரில் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக விசேஷமான பிரசார வேனும் தயாராக உள்ளது.

Leave a Reply